Copyright Information goes here.
All rights reserved
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” திருக்குறள் - 396
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி
சிங்கையில் வசிக்கும் பதிவர்கள் பலமுறை கூட்டிய கூட்டங்களில் குமுகாய அக்கறை வெளிப்படும். நம்மால் முடியக் கூடிய செயல்கள் என்று பலவற்றை விவாதித்து இருக்கிறோம். அப்படிப் பட்ட பணிகளில் பலவும் பலரால் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வந்திருக்கின்றன. ஒரு பதிவர் குழுமம் செய்யக் கூடிய பணி என்று என்ன செய்யலாம் என்ற எண்ணம் சிறிது சிறிதாக உருப்பெற்று இன்று மணற்கேணியாக வெளிப்பட்டிருக்கிறது.
மணற்கேணி – பரப்பில் அள்ளினால் மணல்; சற்று முனைந்து தோண்டினால் நீர். பதிவர்கள் ஒரு பொருளில் மேம்போக்காய் எழுதுவதை விட தொடர்புடைய தகல்களைத் திரட்டி உண்மை நிலையை விளக்கி இன்னும் செறிவாக எழுதுவது சிறப்பு. இது பொதுச்சிந்தனையிலிருந்து விடுபடவும், உணர்ச்சியால் செலுத்தப் படுவதை தவிர்க்கவும் உதவும் என்ற கருதுகோளில் ஒரு தளத்தில் செயல்படுகிறோம்.