Copyright Information goes here.
All rights reserved
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” திருக்குறள் - 396
சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி
1. சிங்கைப் பதிவர்கள், தமிழ்வெளி நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களின் கட்டுரைகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.
2.சிங்கப்பூரில் பணியிலிருப்பவர்கள், சிங்கப்பூரில் நீண்ட கால அனுமதி விசாவில் தங்கியிருப்பவர்கள், சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் கலந்து கொள்ள இயலாது.
3. ஆக்கங்கள் 1000 சொற்களில் இருந்து 6000 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4 . ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளில் பங்கெடுக்கலாம் ஆனல் ஒருவர் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம். படைப்புகளை அனுப்ப அறிவிக்கப் பட்ட நிறைவுநாள் வரையில் திருத்தங்கள் ஏற்கப்படும். ஒவ்வொரு முறை திருத்தங்களை அனுப்பும்போதும் முழு கட்டுரை வடிவமாக மட்டுமே அனுப்ப வேண்டும், கடைசியாக அனுப்பப்பட்ட கட்டுரை(ஒவ்வொரு தலைப்பிலும்) மட்டுமே ஏற்கப்படும்.
5. போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரைகள் இதற்கு முன் எந்த வடிவத்திலும்/தளத்திலும்/ஊடகத்திலும் வெளியிடப்பட்டதாக இருக்கக்கூடாது. வேறெங்கிருந்தும் எடுத்து இணைத்திருக்கக் கூடாது, கட்டுரை படைப்பாளியின் சொந்த கட்டுரையாக இருக்க வேண்டும், படைப்பு சொந்தம் தொடர்பான எந்த பிரச்சினைகளுக்கும் கட்டுரை அனுப்புபவரே பொறுப்பாவார்.
6 .பங்கு பெறும் படைப்புகளை அனுப்ப அறிவிக்கப் பட்ட நாள் முதல் நிறைவு நாள் வரையில் எங்கும் வெளியிடக்கூடாது.
7. போட்டி நிறைவு நாளுக்குப் பின் அனுப்பப்படும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. போட்டி இறுதி நாள் ஆகச்டு 15, 2009 23:59:59 (தமிழக நேரம்)க்குள் அனுப்ப வேண்டும்
8. பங்கு பெறுபவர் தன் பெயர் மற்றும் பிறந்த நாளை கடவுச்சீட்டில்(Passport) உள்ளபடி (ஆங்கிலத்தில்) கட்டுரையின் முகப்பில் தர வேண்டும். கடவுச்சீட்டு இல்லாதவர்கள் தங்களின் கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் தர இருக்கும் முழுப்பெயர் மற்றும் பிறந்த நாளை இணைக்கவும். பரிசு பெற்றவர் அவருக்கு பதிலாக வேறொருவரை பரிந்துரைத்தால் ஏற்க இயலாது.
9. வெற்றி பெறுபவர்கள் முறையான சிங்கப்பூர் சுற்றுலா குடிநுழைவு அனுமதி (டூரிஸ்ட் விசா) பெற முடிந்தால் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள். குடிநுழைவுக் கட்டணம் சிங்கை வெள்ளி 30 பின்னர் தரப்படும்.
10. பயண ஏற்பாடுகள், தங்குமிடம் நிர்வாகக் குழுவின் முடிவுக்குட்பட்டது.
11. போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு சிங்கை வரும் வெற்றியாளர்கள் சிங்கப்பூர் குடிநுழைவு விதிகள் படி சிங்கப்பூர் சட்டம் / ஒழுங்கு முறைகளுக்கு கட்டுப்பட்டவர் என்பதை கருத்தில் கொண்டு மீறாமல் நடந்து கொள்ளவேண்டும், மீறி நடந்து சட்ட சிக்கல் ஏற்பட்டால் அதற்கு போட்டி நிர்வாகம் பொறுப்பேற்காது, உதவ முன்வராது
12. . பயணத்திற்கான பயணக் காப்பீட்டை வெற்றியாளர்கள் எடுத்து வரவேண்டும் (போட்டி நடத்தும் நிர்வாகத்தின் பரிந்துரை)
13. விதிமுறைகள் முன்னறிவிப்பின்றி மாற்றப்படலாம்.
14. போட்டி தொடர்பான அனைத்து செயல்பாடுகளிலும் நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானது. எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் இதன் பேரில் எடுக்க இயலாது.
15. போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் போட்டியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கட்டுரைகளை சிங்கை வலைப்பதிவர்கள் குழுமம் மற்றும் தமிழ்வெளி எவ்வடிவத்திலும் பயன்படுத்த அனுமதிக்கின்றார்கள், கட்டுரையின் உரிமை கட்டுரை ஆசிரியருக்கே சொந்தம்.
அரசியல் சமூகம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி politics@sgtamilbloggers.com
தமிழ் இலக்கியம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி literature@sgtamilbloggers.com
தமிழ் அறிவியல் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி science@sgtamilbloggers.com
அரசியல் சமூகம் பிரிவில் கட்டுரை அனுப்ப விரும்புபவர்கள் பிரிவு குறியீடு "அச" என்று குறிப்பிட்டு பின் தலைப்பு எண் குறிப்பிட்டு பின் தலைப்பை குறிப்பிட வேண்டும்.
எடுத்துக்காட்டாக அரசியல் சமூகம் பிரிவில் தலைப்பு எண் 1) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும் என்ற தலைப்பில் கட்டுரை அனுப்ப
அச-1 பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும் என்று மின் மடல் தலைப்பில்(Subject) குறிப்பிட்டிருக்க வேண்டும்
அரசியல் / சமூகம் பிரிவு குறியீடு "அச"
தமிழ் இலக்கியம் பிரிவு குறியீடு "இல"
தமிழ் அறிவியல் பிரிவு குறியீடு "அறி"